இந்தியா

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு -விக்ரம் மிஸ்ரி

Din

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் மூலம் நிலைமையை மோசமாக்கியது பாகிஸ்தான்: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை வாயிலாக இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்துள்ளது. இப்போது பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தானின் பொறுப்பு’ என்று வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவும் நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதற்றம் தூண்டப்பட்டது. நிலைமையை மோசமாக்குவது இந்தியாவின் அணுகுமுறை அல்ல. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்தது. பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து, கட்டுப்பாடான ரீதியில் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் பொது மக்களை குறிவைத்துள்ளது.

உலகளாவிய பயங்கரவாத மையமாக உள்ள பாகிஸ்தானுக்கு உலகின் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புள்ளது. இந்தியாவுக்கு எதிராக நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது என்றாா் மிஸ்ரி.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT