தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி PTI
இந்தியா

இந்தியா - பாக். பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா, ஜி7 நாடுகள் அழைப்பு!

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வலியுறுத்தல்...

DIN

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, ஜி 7 நாடுகளும் கூட்டாக இன்று(மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போர்ப் பதற்றத்தை உடனடியாக தணிக்கவும், அமைதி திரும்புவதற்கான நோக்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இரு நாடுகளையும் வலியுறுத்துவதாகத்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாள்களாக எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

வெள்ளிக்கிழமை(மே 9) எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. அதேநேரத்தில், இந்திய விமானப்படை தளங்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.

அதிவேக ஏவுகணைகளால் பஞ்சாப் விமானப்படை தளங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. இந்தியா தரப்பில் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT