இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களும் திறக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்குப் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு பதில் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தி அவற்றை முறியடித்தது.
இந்தியத் தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் மே 10-ம் தேதி மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், போர்ப் பதற்றம் காரணமாக இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் விமான சேவைகள் மே 15 வரை நிறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான போர்ப் பதற்றம் தற்போது முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையங்களின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவது குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.