சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது மினி லாரி மோதியதில் 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், சடோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பனா பனாரசியில் நடந்த சத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மினி லாரியில் நள்ளிரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ராய்ப்பூர்-பலோதாபஜார் சாலை அருகே டிரெய்லர் மீது மினி லாரி திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண்கள் உள்பட 13 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் கௌரவ் சிங் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக ஆட்சியர் மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.