சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்றது.
இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாக செய்திகள் வெளியாகின.
cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்வு முடிவுகளைக் காண்பதற்கான லிங்க் சேர்க்கப்படவில்லை. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முடியாமல் பெற்றோர் தரப்பிலும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ அறிவித்த எந்த இணைய தளத்திலும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகதது மாணவர்கள் மத்தியில் குழுப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.