உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோவிலிருந்து படம் - எக்ஸ்
இந்தியா

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

DIN

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக 109 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தியாவுக்கு வருகை புரிந்தனர்.

இதனிடையே தெலங்கானா சுற்றுலாத் துறை சார்பில் போட்டியாளர்கள் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்திலுள்ள ராமப்பா கோயிலுக்குச் சென்றிருந்த அழகிப் போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவி விடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இதற்கு பலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது காலனித்துவ மனப்பான்மையிலான செயல் என பலர் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷண் ரெட்டியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT