ஜம்மு-காஷ்மீர்.  
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் வனப்பகுதிகளைச் சுற்றி வளைத்து பயங்கரவாத தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரில் வனப் பகுதிகளைச் சுற்றி வளைத்து 3 பயங்கரவாத சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது.

DIN

ஜம்மு-காஷ்மீரில் வனப்பகுதிகளைச் சுற்றி வளைத்து 3 பயங்கரவாத சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு மூன்று சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து உள்ளூர்வாசிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நங்கல், சில்லடங்கா, கோரன் மற்றும் அருகிலுள்ள வனப் பகுதிகளைச் அதிகாலையில் சுற்றி வளைத்து காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் கூட்டுக் குழு முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் எந்த தடயமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர்கள் மேலும் கூறினர். பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் பலியாகினா்.

லைகாவை மிஞ்சிய முதலீடு... யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ண மானே... ஸ்வேதா!

தங்கச் சிலை... சப்தமி கௌட!

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

SCROLL FOR NEXT