மெஹபூபா முஃப்தி 
இந்தியா

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

மத்திய அரசு தலையிட்டு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்...

DIN

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிப்புக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய போர்ப் பதற்றம் காரணமாக காஷ்மீரில் பலர் உயிரிழந்தனர். சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள பல பகுதிகளுக்குச் சென்று ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளை நேரில் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

ஷெல் தாக்குதலால் பாதித்த பகுதிகளைப் போர் பாதிப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும், இதனால் மக்களின் மறுவாழ்வுப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

எல்லையில் ஷெல் தாக்குதலால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். போரில் உயிரிழந்த அனைவருக்கும் தியாகிகள் அந்தஸ்து வழங்க வேண்டும். காஷ்மீர் மக்கள் அப்பாவிகள், அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

பூஞ்ச், உரி, டாங்தார் மற்றும் குப்வாரவின் சில பகுதிகளில் ஷெல் தாக்குதலால் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பலரது குடும்பங்கள் சிதைந்துள்ளன. வீடுகள் தரைமட்டமாக்கியது. தங்குவதற்கு இடமில்லாமல் பலர் வீடுகளை இழந்து திறந்தவெளியில் வாழ்கின்றனர். ஆனால் சேதத்தை ஈடுகட்ட வங்கிகள் காப்பீடு வழங்க மறுத்து வருகின்றனர்.

இதில் மத்திய அரசு தலையிட வேண்டும். வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டியவர்களின் வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மக்கள் எப்போதும் போரைப் பற்றி சிந்திக்க வேண்டுமா என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும். போர் ஒரு தீர்வல்ல, போரை ஆதரிப்பவர்கள் எல்லைப் பகுதிகளில் தங்கள் குடும்பங்களுடன் வந்து வாழ வேண்டும். அப்போது தான் உண்மையில் போர் என்றால் என்ன என்பதை அவர்கள் உணர்வார்கள்.

போர் எதற்கும் தீர்வாகாது. நமக்கு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் உள்ளன. போருக்கு நாம் செலுத்த வேண்டிய வட்டி இதுதான்.

சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு என்ன சாதிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது என்றாலும், எல்லையில் வசிக்கும் மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. ஆனால் பயங்கரவாதிகள் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளனர். அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானை முன்பே எச்சரித்ததாகக் கூறினார், நீங்கள் அவர்களை எச்சரித்தபோது, ​​பயங்கரவாதிகள் தப்பிக்க வாய்ப்பளித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

சொந்த மண்ணில் மெஸ்ஸியின் கடைசி போட்டி: டிக்கெட் விலை உயர்வு!

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT