முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.. 
இந்தியா

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி, கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்லி வீர் பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அப்பா, ஒவ்வொரு அடியிலும் உங்களது நினைவுகள் என்னை வழிநடத்துகின்றன. உங்கள் நிறைவேறாத கனவுகளை நினைவாக்குவதே எனது தீர்மானம். நான் நிச்சயமாக அவற்றை நிறைவேற்றுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் சிறந்த மகனான ராஜீவ் காந்தி, நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையைத் தூண்டினார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவை தயார்படுத்துவதில் அவரின் தொலைநோக்குப் பார்வை முக்கிய பங்கு வகித்தது.

ஓட்டுப் போடும் வயதை 18 ஆகக் குறைத்தல், பஞ்சாயத்து ராஜ்ஜை வலுப்படுத்துதல், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஆகியவற்றில் முக்கிய பங்குவகித்தார்.

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் தியாக நாளில் அவருக்கு எங்கள் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் மோட்டார் நிகர லாபம் 8% சரிவு!

49 வயதில் அம்மாவுக்கு எம்பிபிஎஸ் சீட்! மகளும் பொதுப்பிரிவில் போட்டியில் இருக்கிறார்!

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT