கோப்புப் படம் 
இந்தியா

நொய்டாவில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழப்பு

கிரட்டா் நொய்டா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Din

கிரட்டா் நொய்டா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள 21 அடுக்குமாடி கட்டடத்தின் கிரீல் பகுதி விழுந்ததில், 60 வயது மூதாட்டியும் அவரது 4 வயது பேரனும் உயிரிழந்தாா்.

தாத்ரி பகுதியில் மரம் விழுந்ததில் டிஏவி பள்ளி ஆசிரியா் ராம்கிஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

என்டிபிசி வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மேலும் சிலா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

அவுரி (சிறுகதைத் தொகுப்பு)

SCROLL FOR NEXT