கோப்புப் படம் 
இந்தியா

தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!

தலைநகர் தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

DIN

புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலம் முழுவதும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், அம்மாநில அரசு அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, புது தில்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் இன்று (மே 23) கூறுகையில், மே 22 ஆம் தேதி வரை 23 கோவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் பயண விவரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்துடன், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“தில்லி அரசு எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளது. நாங்கள் ஏற்கனவே மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

அவசரகால தயார்நிலை குறித்து கூறுகையில், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் எச்சரிக்கையாகவுள்ளதாகவும், உடனடி செயல்பாட்டுக்கு அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தயார்நிலையிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதனால், தில்லி அரசு அம்மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துக்கள் மற்றும் தடுப்பூசிகளை தயார்நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

SCROLL FOR NEXT