கோப்புப் படம் 
இந்தியா

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

அசாமில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருவதைப் பற்றி...

DIN

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை அம்மாநில அரசு கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தற்போது நல்பாரி, சௌத் சல்மரா மற்றும் கம்ரூப் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், அசாமில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு ஆதரவாக மற்றும் இந்தியாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை அசாம் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இதில், அம்மாநிலத்தின் ஏ.ஐ.டி.யூ.எஃப். கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான அமினுல் இஸ்லாம் என்பவரும் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT