இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, பூஞ்ச் பகுதியில் ட்ரோன் மற்றும் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இன்று காலை புது தில்லியிலிருந்து ஜம்மு - காஷ்மீர் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அங்கிருந்த பள்ளி ஒன்றுக்கும் சென்று, பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அவர்கள் தங்களது கவலையை தெரிவித்தபோது, கவலை வேண்டாம், நிலைமை நிச்சயம் சரியாகும், இந்த பிரச்னைக்கு நீங்கள் கொடுக்கும் தீர்வாக இருக்க வேண்டியது என்னவென்றால், நன்றாக படியுங்கள், நன்றாக விளையாடுங்கள், பள்ளியில் அதிகமான நண்பர்களை சேருங்கள் என்று கூறினார்.
மேலும், மாணவர்களைப் பார்த்து இதனை செய்வீர்களா என்று ராகுல் கேட்டதற்கு மாணவர்களும் செய்வோம் என்று ஒருமித்தக் குரலில் பதிலளித்தனர். தொடர்ந்து மாணவர்களிடம் ராகுல் கலந்துரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.