ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி.. 
இந்தியா

ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி அறிமுகம்! வியக்கவைக்கும் விலையில்..!

ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி பைக்கைப் பற்றி...

DIN

கம்யூட்டர் மற்றும் பந்தய பைக்குகளுக்கு பெயர்பெற்ற ஹோண்டா நிறுவனம் ஹார்னெட் மாடலில் 1000 சிசி கொண்ட புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காணலாம்.

கவாஸாகி Z900 மற்றும் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாகவே நேக்ட் மாடல் (naked model) வகையில் இந்த பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி பைக்கில் 999cc, இன்லைன்-ஃபோர் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 11,000rpm-ல் 155bhp-யையும் 9,000rpm-ல் 107Nm திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் 6 விதமான வேக கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் மழைக்காலம், ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று வடிவங்கள் உள்ளன. ரைடர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்றவற்றை மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.12.35 லட்சத்தில் இருந்து துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT