பினராயி விஜயன் கோப்புப் படம்
இந்தியா

பினராயி விஜயன் பிறந்தநாள்: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து..

DIN

கேரள முதல்வர் பினராயி விஜயனின் 80வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது 80வது பிறந்தநாளாகும். முதல்வர் பினராயி விஜயன் அலுவலகப் பணிகளில் ஈடுபடுவதால் முறையான கொண்டாட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றதன் நான்காவது ஆண்டு நிறைவை மாநிலம் கொண்டாடியதன் ஒரு நாளுக்குப் பிறகு அவரது பிறந்தநாள் வந்துள்ளது.

அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கேரள முதல்வருக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில்,

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இடதுசாரித் தலைவர் நீண்ட ஆரோக்கியமான வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இறைவன் அவருக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆசிர்வதிக்கட்டும் என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும், வரவிருக்கும் ஆண்டு ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் நிறைந்ததாக இருக்கட்டும்" என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அணு ஆயு​தம் என்​னும் அச்​சு​றுத்​தல்

வேலூா் சிறையில் ஆயுள் கைதி அறையில் கைப்பேசி பறிமுதல்

SCROLL FOR NEXT