கெளரவ் கோகோய்  PTI
இந்தியா

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவரானார் கெளரவ் கோகோய்!

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் கெளரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் கெளரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, அஸ்ஸாம் மாநில செயல் தலைவர்களாக ஜாகின் உசேன் சிக்தார், ரோசனிலா டிர்கே மற்றும் பிரதீப் சர்கார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

’’அஸ்ஸாம் மாநிலத்துக்கான தலைவர் மற்றும் செயல் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். இதன்படி, மாநிலத் தலைவராக கெளரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

செயல் தலைவர்களாக ஜாகின் உசேன் சிக்தார், ரோசனிலா டிர்கே மற்றும் பிரதீப் சர்கார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மாநிலத் தலைவராக சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த பூபென் குமார் போராவை கட்சித் தலைமை பாராட்டுகிறது. ரோசனிலா டிர்கே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஆன்லைனில் எதிர்மறை விமர்சனத்தை பதிவிட்டவருக்கு ரூ. 16 லட்சம் அபராதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா?

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு

மின்கம்பத்தை மாற்றித்தரக் கோரிக்கை

செப்.5-இல் மதுக்கடைகள் இயங்காது!

SCROLL FOR NEXT