போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள். PTI
இந்தியா

மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: போக்குவரத்து முடங்கியது!

மும்பைக்கு கனமழை பெய்து வருவது பற்றி...

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று காலைமுதல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தண்டவாளங்களில் நீர் தேங்கியதால் ரயில் சேவையும், மோசமான வானிலை காரணமாக 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மும்பை, தாணே உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், காலைமுதல் பெய்த கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.

மும்பை, தாணே, ராய்காட் மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் விடுவித்ததை தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை 9 மணிமுதல் 10 வரையிலான ஒரு மணிநேரத்தில் மட்டும் மும்பையின் நரிமன் பாயிண்ட் பகுதியில் 104 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

பல்வேறு சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியதால் இன்று காலை அலுவலகத்துக்கு சென்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும், மும்பை பகுதியில் அடுத்த 24 மணிநேரத்துக்கு 40 கி.மீ. வரை காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT