பிரிஜ் பூஷண் சிங். 
இந்தியா

பிரிஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கு முடித்து வைப்பு

இந்திய குத்துச் சண்டை சம்மேளத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீதான போக்ஸோ வழக்கை தில்லி நீதிமன்றம் முடித்து வைத்தது.

Din

புது தில்லி: பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய குத்துச் சண்டை சம்மேளத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீதான போக்ஸோ வழக்கை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.

எனினும், அவா் மீது குத்துச் சண்டை வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்பட 6 போ் தொடுத்த பாலியல் வழக்கு தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

குத்துச் சண்டையில் ஈடுபடும் சிறுமி அளித்த பாலியல் புகாரை தில்லி போலீஸாா் விசாரித்து வந்தனா்.

பிரிஜ் பூஷண் மீது தனது மகள் பொய்யான புகாரை அளித்ததாக அவரது தந்தை விசாரணையின்போது தெரிவித்ததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று 2023, ஜூன் 15-ஆம் தேதி தில்லி போலீஸாா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனா்.

மேலும், அதே ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நீதிபதி அறையில் நடைபெற்ற விசாரணையின்போது சிறுமி ஆஜராகி தில்லி போலீஸாரின் விசாரணை திருப்தியளிப்பதாகக் கூறியிருந்தாா்.

இதையடுத்து, தில்லி போஸீஸாரின் வழக்கு ரத்து அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கோமதி மனோசா திங்கள்கிழமை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தாா்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT