பாகிஸ்தானுடன் அணு ஆயுதப் போர் மூள வாய்ப்பு இருந்ததா என்பது குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
ஜொ்மன் நாளிதழுக்கு அவா் அளித்துள்ள பேட்டியில், “உலக நாடுகளில் ஒரு போக்கு நிலவுகிறது. அது யாதெனில், எந்தவொரு சம்பவம் நடைபெற்றாலும் அதனை அணு ஆயுத பிரச்சினையுடன் ஒப்பிடும் போக்கு நிலவுகிறது.
ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிகழ்ந்த தீவிர சண்டையின்போது, அணு ஆயுதங்கள் பயன்பாடு கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு இல்லவேயில்லை” என்றார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலில் பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சக குழு எம்.பி.க்களிடம் ஜெய்சங்கா் கேட்டுக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.