உலகளாவிய ஒழுங்கை வடிவமைக்க உதவும் கடமை இந்தியா, ஜப்பானுக்கு உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோடேகியுடனான சந்திப்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், "உலகின் மிக முக்கிய பொருளாதாரங்களில் நாம்தான் இருக்கிறோம். இன்று நமக்கு உலகளாவிய ஒழுங்கை வடிவமைப்பதற்கான கடமையும் உள்ளது.
தற்போதைய நிச்சயமற்ற உலகளாவிய சூழ்நிலையில், இலக்குகளை நோக்கி நாம் நெருக்கமாகப் பணியாற்றுவது முக்கியமானது.
இன்று பொருளாதாரப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நம் இரு நாடுகளும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன.
நமது இருநாட்டு மற்றும் சர்வதேச பொருளாதாரங்களை எவ்வாறு ஆபத்தில் இருந்து விலக்குவது என்பது முக்கியமானவை.
இருநாட்டு பேச்சுவார்த்தையில் விநியோகச் சங்கிலிகள், முக்கியமான கனிமங்கள், எரிசக்தி, சுகாதாரம், கடல்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இருநாடுகளும் ஒரு பரந்த, விரிவான நட்புறவைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.