கோப்புப் படம் 
இந்தியா

தாணேவில் புதிதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 72 பேர்!

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைப் பற்றி...

DIN

மகாராஷ்டிரத்தின் தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக, தாணே நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாணேவில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கரோனா நோயாளிகளில் 10 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 16 பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதில், 45 கரோனா நோயாளிகள் தங்களது வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

”இந்தப் பரவலை நாங்கள் மிகவும் நெருக்கமாகக் கவனித்து வருகிறோம், நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சையளிக்கவும் சுகாதாரத் துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சங்கர் மகாதேவன் இசையில் 22 மொழிகளில் விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் நிதின் கட்கரி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT