கோப்புப் படம் ENS
இந்தியா

கரோனா! வருமுன் காக்க... 6 வழிகள்!

கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளும் சில வழிமுறைகள் பற்றி...

DIN

கடந்த 2020-2022 காலகட்டத்திற்குப் பிறகு தற்போது இந்தியாவில் கரோனா தொற்று பரவி வருகிறது.

கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்ற நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

1. முகக்கவசம்

கூட்டம் அதிகமுள்ள இடங்கள், நெருக்கடியான இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கண்டிப்பாக மூக்கு, வாய் மூடியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கரோனா தொற்று பரவுவது குறையும்.

2. கைகளைக் கழுவுதல்

கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதுவும் ஒரு 20 நொடிகளாவது கைகளின் அனைத்துப் பகுதிகளில் சோப்பு படும்படி கழுவுவது அவசியம். சானிடைசர் திரவங்களையும் பயன்படுத்தலாம்.

3. இடைவெளி தேவை

குறைந்தது 6 அடி இடைவெளி தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இது கரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் இருமும்போது தும்மும்போது நீர்த்துளிகள் உங்களை அண்டாதவாறு பார்த்துக்கொள்ளும்.

4. தொடுதல் கூடாது!

முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். கண்கள், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளை கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும். இதனால் இந்த உறுப்புகளின் மூலமாக வைரஸ் உடலுக்குள் நுழைவது தடுக்கப்படும்.

5. சுகாதாரம் அவசியம்

கதவின் கைப்பிடிகள், மொபைல் திரைகள், மாத்திரைகள், மேசை, நாற்காலி என வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

6. தனிமைப்படுத்துதல்

உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ கரோனா அறிகுறிகள் இருந்தாலோ வீட்டிலேயே இருப்பது நல்லது. மருத்துவரையும் அணுகுவது அவசியம். இதனால் மற்றவருக்கு கரோனா பரவுவது தடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

தேரே இஷ்க் மெய்ன் டீசர்!

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

SCROLL FOR NEXT