முகப்பு
இந்தியா

மணிப்பூரில் தொடர் நிலநடுக்கம்!

மணிப்பூரில் காலை முதல் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பதிவாகியுள்ளன.

Updated On : 28 மே, 2025 at 10:29 AM
மணிப்பூரில் நிலநடுக்கம்... - National Centre for Seismology.
பகிர்:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தின் இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் இன்று (மே 28) அதிகாலை முதல் 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அதிகாலை 1.54 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளது. அதன் பின்னர், நோனே மாவட்டத்தில் அதிகாலை 2.26 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காலை 10.23 மணியளவில் மீண்டும் சூராசந்திரப்பூரில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தொடர் நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிக்க: சண்டிகரில் கரோனாவுக்கு ஒருவர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.