கோப்புப் படம் 
இந்தியா

மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

மேற்கு வங்கத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக, மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று (மே 29) கனமழை பெய்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வடக்கு மற்றும் தெற்கு 24 பார்கானாஸ், நதியா, முர்ஷிதாபாத், புர்பா, பாஸ்சிம் பர்தாமன் மற்றும் பிர்பம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் சூராவளி காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று காலை 0.1 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த 48 மணிநேரத்துக்கு அம்மாநில மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க அரசு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில், தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்ததுடன், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிரம்ப் வரிவிதிப்புக்கு தடை! இந்தியா போரை நிறுத்தியதாக அமெரிக்க அரசு வாதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT