பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற சந்தேகத்தின்பேரில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷாகுர் கான் என்பவரை, புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஷாகுர் பணியாற்றி வந்த நிலையில், அவரது செல்போனில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக, ஷாகுர் கானுக்கு எதிராக சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆதாரங்களைக் கொண்டு, அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்தான், புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
அவர் ஜெய்ப்பூர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.