கோப்புப் படம்  
இந்தியா

உ.பி: அரசு சுகாதார நிலையத்தில் செல்போன் ஒளியில் பிரசவம்! விசாரணைக் குழு அமைப்பு!

உத்தரப் பிரதேசத்தின் அரசு சுகாதார நிலையத்தில் செல்போன் வெளிச்சத்தில் 4 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பாரக்கப்பட்டுள்ளது.

DIN

உத்தரப் பிரதேசத்தின் அரசு சுகாதார நிலையத்தில் 4 கர்ப்பிணி பெண்களுக்கு செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள தனிக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பெருர்பாரி மாவட்டத்தின் அரசு சுகாதார நிலையத்தில், கடந்த மே 26 ஆம் தேதியன்று இரவு மின்சாரப் பற்றாக்குறையால், 4 பெண்களுக்கு செல்போன் ஒளியின் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தைகள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் உள்ளூர் ஊடகங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ள, துணைத் தலைமை மருத்துவ அதிகாரி தலைமையில் தனிக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமை மருத்துவ அதிகாரி சஞ்சீவ் பார்மன் கூறியதாவது:

“இந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடைபெறுவதற்கு 3 நாள்களுக்கு முன்னர், பெருர்பாரி சுகாதார நிலையத்திலுள்ள மின்மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்) தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது. ஆனால், அங்கு ஜெனரேட்டர் மற்றும் அதற்கான டீசல் இருந்தபோதிலும் இப்படியொருச் சம்பவம் அரங்கேறியுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் இந்தச் சமபத்துக்குக் காரணமானவர்களுக்கு மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிக்க: அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் முன்னாள் பாஜக தலைவர் மகன் உள்பட 3 பேர் குற்றவாளிகள்; ஆயுள் தண்டனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT