வந்தே பாரத் ரயில் கோப்புப்படம்
இந்தியா

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து, சென்னையிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு வந்தே பாரத்தில் செல்லும் பயணிகள் இது தொடர்பாகப் புகார் அளித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு ரயில்வே அல்லது ஐஆர்சிடிசி தரப்பில் இது குறித்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது ஐஆர்சிடிசி செயலி மூலம், பயணிகள் வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, ஒரு பாப்அப் மெசேஜ் வருகிறது. அதில், மதியம் மற்றும் இரவு உணவுக்கு மட்டுமே அசைவ உணவை தேர்வு செய்துகொள்ள முடியும் என்று அதில் தெரிவிக்கப்படுவதாகவும் பயணிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதிய உணவின்போது, உணவு பற்றி கருத்துக் கேட்டு படிவம் கொடுக்கிறார்கள். அதில் எந்தக் குறையை எழுதினாலும், அதற்கான பதில் கிடைப்பதில்லை என்றும் பயணிகள் கூறுகிறார்கள்.

இது மட்டுமல்ல, சென்னையிலிருந்து நாகர்கோயில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலி செல்லும் விரைவு ரயில்களில் கூட ஏராளமான வட மாநில உணவுகள்தான் இடம்பெறுகின்றன. இதன் சுவை தென்னிந்தியர்களுக்குப் பெரும்பாலும் பிடிப்பதாக இல்லை என்றும் சில பயணிகள் கூறுகிறார்கள்.

இது குறித்து உரிய விளக்கம் கொடுத்து, பயணிகளின் புகார்கள் மீது கவனம் செலுத்துமா ஐஆர்சிடிசி என்பதே பெரும்பாலானோர் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT