வாரணாசியில் சைபர் குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட 654 செல்போன் எண்களையும், 335 ஐஎம்இஐ எண்களையும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் சைபர் குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மக்களிடமிருந்து வரும் குற்றச்சாட்டுகளை அடுத்து விசாரணை நடத்தி, சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் செல்போன் எண்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வாரணாசியில் மட்டும் 654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 6 போலியான கால் சென்டர்கள் நடத்தி முறைகேடுகளை செய்து வந்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், பொதுவிடங்களிலும், மக்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு, கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.