இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்விஎம் 3 ராக்கெட்!

கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் இன்று (நவ. 2) மாலை பாய்ந்தது.

கடந்த 2013-ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால், இதற்கு மாற்றாக சுமாா் ரூ.1,600 கோடியில் அதிநவீன சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7ஆா்) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டதால், புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக எடையுடையதாக சிஎம்எஸ்-03 உள்ளது.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக எடை உடையதால், இந்த செயற்கைக்கோள் சுமந்து செல்லும் ராக்கெட், பாகுபலி ராக்கெட் எனப்படுகிறது.

இந்திய பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போா்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத்தொடா்பு சேவையை மேம்படுத்தவும் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | பிகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் மீன்பிடித்த ராகுல் காந்தி

Isro LVM-3 CMS-05 launch successfully

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை!

கரூர் பலி: தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

நெடுஞ்சாலைகளில் க்யூஆர் குறியீடு! ஒப்பந்ததாரர், அதிகாரிகள் விவரங்கள் அறியும் வசதி!!

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: விஜய் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT