ராஜஸ்தானில் புஷ்கர் கண்காட்சியில் கவனம்பெற்ற ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது.
கண்காட்சியின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக இந்த எருமை மாடு இருந்து வந்தது. ஒவ்வொரு நாளும் இதனைக் காணவே ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். அதிக மதிப்புடைய எருமை என்பதால் சிறப்பு ஏற்பாடுகளுடன் புஷ்கருக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கண்காட்சியில் கவனம்பெற்ற எருமை மாடு வெள்ளிக்கிழமை திடீரென உயிரிழந்தது. எருமையின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் கிடைத்தவுடன் கால்நடை மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளிக்க சிறந்த முறையில் முயன்றபோதிலும், எருமையின் மிகப்பெரிய உடல் எடையும், அதனுடைய நிலை வேகமாக மோசமடைந்ததாலும் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திடீர் இறப்பு அல்ல. எருமையை காப்பீட்டு தொகைக்காக திட்டமிட்டு கொன்றுள்ளனர் என்று பயனர் ஒருவர் கூறினார்.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கா் கால்நடை கண்காட்சி அக்டோபா் 30-ஆம் தேதி தொடங்கி, நவம்பா் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் விற்பனைக்காக 4,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் 3,028 குதிரைகள் மற்றும் 1,306 ஒட்டகங்கள் அடங்கும்.
கண்காட்சியில் முக்கிய ஈா்ப்பாக 1,500 கிலோ எடையுள்ள ‘அன்மோல்’ என்ற எருமை இடம்பெற்றது. இதன் விலை ரூ.21 கோடி என்று நிா்ணயிக்கப்பட்டது. இந்த எருமை ‘அரச குடும்ப நபரைப் போல வளா்க்கப்படுகிறது’ என்றும், நாள்தோறும் பால், நாட்டு நெய் மற்றும் உலா் பழங்கள் கொடுக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளா் பாலிமிந்திரா கில் குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.