பஹல்காமில் சினிமா படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!
பஹல்காமில் பல வார இடைவெளிக்குப் பின் சினிமா படப்பிடிப்பு தொடக்கம்!
ஸ்ரீநகர்: பஹல்காமில் பல வார இடைவெளிக்குப் பின் சினிமா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனா்.
இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கல் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று(நவ. 3) பஹல்காமில் படப்பிடிப்பு தொடங்கியது. பஹல்காமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதால் எவ்வித அச்சுறுத்தலுக்கும் இடமின்றி படப்பிடிப்பு நடத்த முடிவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.