தேசிய நெடுஞ்சாலைகள் 
இந்தியா

நெடுஞ்சாலைகளில் க்யூஆர் குறியீடு! ஒப்பந்ததாரர், அதிகாரிகள் விவரங்கள் அறியும் வசதி!!

சாலைகளில் க்யூஆர் குறியீடு அமைத்து, அதன் மூலம், சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், அதிகாரிகள் விவரங்கள் அறியும் வசதி

இணையதளச் செய்திப் பிரிவு

சாலைகளில், ஆங்காங்கே க்யூஆர் குறியீடுகளை அமைத்து, அதனை ஸ்கேன் செய்வதன் மூலம், அந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், அதிகாரிகளின் விவரங்களை சாதாரண மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யும் முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எந்தக் காலத்திலும் தொடரும் மோசமான சாலைகள் என்ற அவலத்துக்கு முடிவு கட்டும் வகையில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைகளை அமைத்தவர்களின் விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன் ஒரு பகுதியாகவே இந்த க்யூஆர் கோடுகள் அமைக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

சாலைகளில், வாகன நிறுத்திமிடங்கள், சுங்கச் சாவடிகளில் இதுபோன்ற க்யூஆர் குறியீடு கொண்ட போர்டுகள் வைத்து அதில் சாலையை அமைத்தவர்கள், அதனைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரி உள்ளிட்டவர்களின் விவரங்களுடன், மருத்துவமனை, காவல்நிலையம் உள்ளிட்ட 20 சேவைகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT