கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை குடிபோதை நபர் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், வர்கலா ரயில் நிலையத்திலிருந்து கேரள எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவனந்தபுரம் புறப்பட்டது. ரயில் கிளம்பிய சிறிதுநேரத்திலேயே மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், 19 வயது இளம் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, உடன் வந்த தோழியையும் அவர் தள்ளிவிட முயன்றிருக்கிறார்.
ஆனால், அவர் மயிரிழையில் தப்பினார். அலறல் சத்தம் கேட்டதும், சக பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இந்த சம்பவத்தில் இளம்பெண் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த ஸ்ரீகுட்டி(19) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு கடுமையான உள் காயங்கள் ஏற்பட்டன. இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளரடாவைச் சேர்ந்த சுரேஷ் குமார்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் செல்லும் வழியில், தனது தோழியுடன் ஆலுவா ரயில் நிலையத்திலிருந்து அந்த இளம்பெண் ஏறியதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.