தெலங்கானாவில் 10 மாதக் குழந்தைக்கு ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாகக் கிடைத்துள்ளது.
தெலங்கானாவில் ராமபிரம்மம் என்பவர், யாததிரி புவனிகிரி என்ற பகுதியில் தனக்குச் சொந்தமான ரூ. 16 லட்சம் மதிப்புடைய வீட்டை விற்க கடந்த 2 ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். இருப்பினும், வீட்டை விற்பனை செய்யும் முயற்சி, தொடர் தோல்வியில்தான் முடிந்தது.
இந்த நிலையில்தான், குலுக்கல் பரிசு முறையில் வீட்டை விற்க அவர் முடிவு செய்தார். தொடர்ந்து, ரூ. 500 சீட்டின் மூலம், குலுக்கல் பரிசாக ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீட்டை வெல்லலாம் என்ற விளம்பரப் பதாகையை சாலையில் நிறுவினார்.
இதனையடுத்து, பலரும் ரூ. 500 சீட்டை வாங்க முன்வந்தனர். அவர்களில் சங்கர் என்ற ஹோட்டல் தொழிலாளியும் ஒருவர். அவர், தனது பெயரிலும் மனைவி மற்றும் மகள்களான சாய் ரிஷிகா மற்றும் 10 மாதக் குழந்தை ஹன்சிகா பெயரிலும் என மொத்தம் 4 சீட்டுகளை வாங்கினார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) வெளியான குலுக்கல் சீட்டில் ஹன்சிகா பெயரில் பரிசு விழுந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, 10 மாதக் குழந்தை ஹன்சிகாவால் சங்கருக்கு ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு கிடைத்துள்ளது.
மேலும், சுமார் 3600 பேர் ரூ. 500 சீட்டு வாங்கியதால், ராமபிரம்மத்துக்கும் ரூ. 18 லட்சம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.