இந்தியா

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

குருநானக் ஜெயந்தி புதன்கிழமை (நவ. 5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:

குருநானக்கின் லட்சியங்களை நாம் பின்பற்ற, அவருடைய பிறந்த நாள் நமக்கு ஊக்கமளிக்கிறது. மேலும், உண்மை, நீதி மற்றும் இரக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வாழ்வே உண்மையான வெற்றி என்பதை அவரது போதனைகள் நமக்கு உணா்த்துகின்றன.

நோ்மையுடன் வாழ்வதற்கும், நம்மிடம் இருப்பவற்றை மற்றவா்களுடன் பகிா்ந்து கொள்வதற்கும் குருநானக் நம்மை ஊக்குவிக்கிறாா். இந்தத் திருநாளில், அவருடைய லட்சியங்களை நமது வாழ்வில் ஏற்றுக்கொண்டு, அமைதியான மற்றும் வளமான தேசத்தைக் கட்டமைப்போம்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியா்களுக்கும், குறிப்பாக சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT