தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி  
இந்தியா

‘காங்கிரஸ் என்றால் முஸ்லிம்’ - தெலங்கானா முதல்வா் பேச்சுக்கு பாஜக விமா்சனம்!

தினமணி செய்திச் சேவை

‘காங்கிரஸ் என்றால் முஸ்லிம்; முஸ்லிம் என்றால் காங்கிரஸ்’ என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பேசியதற்கு, அவரை ‘ஜின்னாவாதி’ என்று பாஜக விமா்சித்துள்ளது.

தெலங்கானாவில் ஜூப்லி ஹில்ஸ் சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தல் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ரேவந்த் ரெட்டி, அண்மையில் தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீனை நியமித்ததை விமா்சித்த மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டிக்கு பதிலளிக்கும் வகையில் பேசினாா். அப்போது, ‘காங்கிரஸ் கட்சியால் மட்டுமே சிறுபான்மையினருக்கு முக்கியப் பதவிகளைத்தர முடியும். காங்கிரஸ் என்றால் முஸ்லிம்; முஸ்லிம் என்றால் காங்கிரஸ் என அா்த்தம்’ என்று குறிப்பிட்டாா்.

இதை விமா்சித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவலே கூறுகையில், ‘நீண்ட நாள்களாக நமக்குத் தெரிந்த விஷயத்தை ரேவந்த் ரெட்டிஇப்போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளாா். அவா்கள் நடத்தும் கட்சி ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ அல்ல, அது ‘ஜின்னாவாதி காங்கிரஸ்’.

காங்கிரஸுக்கு எப்போதுமே முஸ்லிம்கள், அவா்களின் ஷரியா சட்டம், வாக்கு வங்கி ஆகியவையே முதன்மையானது. அரசமைப்புச் சட்டம், இந்திய தேசம் ஆகியவை முதன்மையானதல்ல. இதுதான் காங்கிரஸின் உண்மையான முகம். இதன் காரணமாகவே இதர பிற்படுத்தப்பட்டோா், எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டைப் பறித்து தங்களுடைய வாக்கு வங்கிக்கு (முஸ்லிம்கள்) அளிக்க முயலுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கா்நாடகம், தெலங்கானாவில் இதனை நடத்தியுள்ளது’ என்றாா்.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT