சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாக, பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபதா ஹைதராபாத் காவல் துறை ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.
சமூக வலைதளப் பக்கங்களில் தனக்கு எதிராகவும், தனது குழந்தைகளுக்கு எதிராகவும் சில தனிநபர்கள் அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாக ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனாரிடம் பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபதா எக்ஸ் தளப் பக்கம் வாயிலாகப் புகாரளித்துள்ளார்.
இதுபற்றி, பாடகி சின்மயி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது:
“மதிப்பிற்குரிய சஜ்ஜனார், நாள்தோறும் நடைபெறும் அவதூறு தாக்குதல்கள் என்னை மிகவும் சோர்வடைய வைத்துள்ளன. அவர்களுக்கு என் கருத்து பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்கள் கண்டுகொள்ளாமல் செல்லலாம்.
இந்த வழக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தாலும் நான் மகிழ்ச்சியுடன் புகாரளிக்கின்றேன். இந்த ஆண்கள் என் குழந்தைகள் இறக்கவேண்டுமென்று கூறுகின்றனர். தயவுசெய்து உதவுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விசாரணை மேற்கொள்ள சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எக்ஸ் தளப் பக்கத்தில் பாடகி சின்மயிக்கு பதிலளித்துள்ள சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பிகார் பேரவைத் தேர்தல்: 64.46% வாக்குகள் பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.