வாக்களிக்கும் பொதுமக்கள். படம்: TNIE
இந்தியா

பிகாரில் முதல்கட்ட வாக்குப் பதிவு நிறைவு!

பிகாரில் முதல்கட்ட வாக்குப் பதிவு நிறைவு தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

பிகாரில் 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

முதல்கட்ட வாக்குப் பதிவு இன்று(நவ. 6) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.

243 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பிகார் பேரவைக்கு இருகட்டங்களாக பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. முதல்கட்டத் தோ்தலில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, சிம்ரி பக்தியார்பூர், மஹிஷி, தாராபூர், முங்கர், ஜமால்பூர் மற்றும் சூர்யாகர்ஹா சட்டப்பேரவை தொகுதியின் 56 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு 5 மணிக்கே நிறைவு பெற்றது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 53.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நவ.11-இல் இரண்டாம்கட்டம்: மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக நவ.11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

The first phase of voting has been completed in 121 constituencies in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலைப் பிடித்து... ஜூஹி ஜெயகுமார்!

கும்கி 2 - டிரைலர் வெளியீடு!

அன்பே... பெரோஷா கான்!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து, தயவுசெய்து உதவுங்கள்; பாடகி சின்மயி புகார்!

சென்னை > தோஹா > ரியாத் > குவைத் > துபை > சென்னை... கல்யாணி பிரியதர்சன்!

SCROLL FOR NEXT