வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஹைட்ரஜன் குண்டு என்ற கருத்து வெறும் சிறிய பட்டாசாக மாறிவிட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கேலி செய்துள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ்,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கும் வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்த ஒரு நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.
வாக்குத் திருட்டு பற்றிய வெளிபாடுகளின் ஹைட்ரஜன குண்டு ஒன்றைத் தனது கட்சி விரைவில் வெளியிடும் என்று ராகுல் சமீபத்தில் கூறினார். அதன்படி புதன்கிழமை தில்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், 2024 ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் திருடப்பட்டது என்று குற்றம் சாட்டுவதற்காக தி எச்-பைல்ஸ் என்ற விளக்கக் காட்சியை வெளியிட்டார்.
25 லட்சம் பதிவுகள் போலியானவை என்றும், வெற்றியை உறுதி செய்வதற்காக தேர்தல் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக வாக்காளர் பட்டியல் தரவை மேற்கொள் காட்டினார்.
காங்கிரஸ் தலைவரின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டதற்கு, ஃபட்னவீஸ், "ராகுலின் ஹைட்ரஜன் குண்டு மிகவும் பலவீனமான குண்டு, உண்மையில் அது ஒரு சிறிய பட்டாசு என்று கேலி செய்தார்.
ராகுல் செய்வதும் அவரது நிகழ்ச்சி நிரலும் நாட்டில் ஜனநாயகம் சரியாக நிலவுவதை விரும்பாத சர்வதேச சக்திகளைப் போல இருக்கின்றன என்றார்.
உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது அவரது வீட்டை விட்டு வெளியே வராததால் விவசாயிகள் சிக்கலில் இருந்ததாகவும், தற்போது அவர் வெளியே வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குறைந்தபட்சம், இப்போதாவது மக்களிடம் செல்ல வேண்டும் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.