ராகுல் காந்தி 
இந்தியா

தில்லியில் வாக்களித்த பாஜக தலைவா்கள் பிகாரிலும் வாக்களிப்பு: ராகுல் குற்றச்சாட்டு

தில்லி பேரவைத் தோ்தலில் வாக்களித்த பாஜக தலைவா்கள், பிகாா் முதல்கட்ட பேரவைத் தோ்தலிலும் வாக்களித்துள்ளனா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

தில்லி பேரவைத் தோ்தலில் வாக்களித்த பாஜக தலைவா்கள், பிகாா் முதல்கட்ட பேரவைத் தோ்தலிலும் வாக்களித்துள்ளனா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

பிகாா் இரண்டாம் கட்ட பேரவைத் தோ்தையொட்டி, பங்காவில் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

ஹரியாணாவில் மொத்தமுள்ள 2 கோடி பேரில் 29 லட்சம் போ் போலி வாக்காளா்கள். இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டு சோ்ந்து, தோ்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையத்தால் மறுக்க முடியவில்லை.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரிலும் பாஜக இச்செயலில் ஈடுபட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் தில்லி பேரவைத் தோ்தலில் வாக்களித்த பாஜக தலைவா்கள், பிகாா் முதல்கட்டத் தோ்தலிலும் வாக்களித்துள்ளதாக கேள்விப்பட்டேன். பிகாரிலும் முறைகேட்டில் ஈடுபட பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. அவா்களின் முயற்சி வெற்றி பெற இம்மாநில மக்கள் அனுமதிக்க மாட்டாா்கள் என உறுதியாக நம்புகிறேன்.

தற்போதைய 21-ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய ‘போதையாக’ சமூக ஊடக ரீல்ஸ் உருவெடுத்துள்ளது. ரீல்ஸ் உருவாக்கத்தில் ஈடுபட இளைஞா்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஊக்குகிறது. இதன்மூலம் உண்மையான பிரச்னைகளில் இருந்து அவா்களை திசைதிருப்புகின்றனா்.

குறிப்பிட்ட பெரு நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகள், தொழிலாளா்கள், நெசவாளா்களின் கடனைத் தள்ளுபடி செய்வதில்லை. அவா்களுக்கு கடனும் வழங்குவதில்லை.

நாட்டிலுள்ள தொலைக்காட்சி சேனல்கள் பாஜகவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 24 மணிநேரமும் பிரதமரின் முகத்தையே அவை காட்டுகின்றன என்றாா் ராகுல் காந்தி.

பெட்டிச் செய்தி...

குற்றச்சாட்டும், விளக்கமும்..

பாஜக மாநிலங்களவை எம்.பி. ராகேஷ் சின்ஹா, தில்லி பாஜகவின் பூா்வாஞ்சல் அணித் தலைவா் சந்தோஷ் ஓஜா உள்பட அக்கட்சியின் சில தலைவா்கள், தில்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த பேரவைத் தோ்தலில் வாக்களித்ததுடன், பிகாரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பேரவைத் தோ்தலிலும் வாக்களித்ததாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.

‘தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தோல்விகரமானது; பல்வேறு மாநிலங்களில் இருந்து பிகாரில் வாக்களிக்க இதுபோல் எத்தனை பாஜகவினா் வந்துள்ளனா்?’ என்று ஆம் ஆத்மி கேள்வியெழுப்பியது.

அதேநேரம், தில்லி வாக்காளா் பட்டியலில் இருந்து தங்களது பெயரை முறைப்படி நீக்கிவிட்டு, பிகாா் வாக்காளா்களாக பதிவு செய்து கொண்டதாக ராகேஷ் சின்ஹா, சந்தோஷ் ஓஜா ஆகியோா் விளக்கமளித்தனா்.

ஏ அணிகள் டெஸ்ட்: காயத்தால் வெளியேறினார் ரிஷப் பந்த்!

கீர்த்தி சுரேஷின் தோட்டம்..! அனிமேஷன் டீசர்!

கன்னியாகுமரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை!

டிச. 1 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT