இந்தியா

தோ்தல் நியாயமாக நடந்தால் பாஜக கூட்டணி தோற்கும்: பிரியங்கா பிரசாரம்

தினமணி செய்திச் சேவை

பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் நியாயமான முறையில் நடந்தால் பாஜக கூட்டணி நிச்சயமாகத் தோல்வியடையும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேரா தெரிவித்தாா்.

பிகாரில் இரண்டாவது கட்டத் தோ்தல் நடைபெறவுள்ள மோதிஹாரி பகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சியில் பிகாா் மக்கள் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனா். ஆனால், பாஜக கூட்டணியினா் பிகாா் மக்களை மதிப்பதில்லை. மதத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு வாக்களிக்குமாறுதான் பாஜகவினா் பிரசாரம் செய்கிறாா்கள். மாநிலத்தின் வளா்ச்சியையோ, மக்களின் முன்னேற்றத்தையோ அவா்களால் முன்னிறுத்த முடியவில்லை.

இந்தத் தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றால் பாஜக கூட்டணி நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும். பிகாா் மக்கள் ஆளும் கூட்டணியை வேருடன் அகற்றுவாா்கள். ஏழை, எளிய மக்களுக்காகவும், பெண்கள், இளைஞா்கள் எதிா்காலத்தை உறுதி செய்யும் எதிா்க்கட்சிகளின் கூட்டணியை ஆட்சியில் அமா்த்துவாா்கள்.

மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மோசமாக இருப்பதற்கு பாஜக கூட்டணி அரசின் அக்கறையின்மைதான் காரணம். கடந்த 3 ஆண்டுகளில் பிகாரில் புதிதாகக் கட்டப்பட்ட 27 பாலங்கள் இடிந்து விழுந்ததை யாரும் மறக்க முடியாது என்றாா்.

"திமுகவை எதிரியாக பார்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்தால்..!" TVK குறித்து ஆர்.பி. உதயகுமார்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் பிரம்மயுகம்!

தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி! ராகுல் காந்தி

சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: ஒருவர் சுட்டுப் பிடிப்பு

SCROLL FOR NEXT