புதுதில்லியில் சாலைகளில் திரியும் தெரு நாய்களை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
தில்லியில் சாலைகளில் திரியும் தெரு நாய்கள், கால்நடைகளை அப்புறப்படுத்துவதோடு, மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் பதாகைகளை ஏந்தியபடி இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், ``பல விலங்குகளைப் பராமரிக்கப் போதுமான தங்குமிடங்களோ பயிற்சிபெற்ற ஊழியர்களோ இல்லை. மேலும், அவைகளுக்கு (தெரு நாய்கள்) தெரிந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது, அவைகளைத் துன்புறுத்துவது போன்றது. அவைகளுக்கு கருத்தடை மற்றும் உணவுதான் தேவை; சிறை அல்ல.
நாய்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காமல், இந்த உத்தரவை அமல்படுத்துவது என்பது கடினம்’’ என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க: பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.