தலைநகர் தில்லியில் இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகி உள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய தகவலின்படி தில்லியில் சனிக்கிழமை காலை காற்றின் தரக்குறியீடு 355ஆகப் பதிவாகியிருந்தது. இது தொடா்ச்சியான மாசு அளவைக் குறிப்பதாகும். காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மக்கள் அவதியுற்றனர்.
இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்ததாவது, தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 28.6°C ஆக இருந்தது, இது வழக்கத்தை விட 0.9 டிகிரி குறைவாகும். தீபாவளிக்குப் பிறகு, தேசியத் தலைநகரின் காற்றின் தரம் ‘மோசம்‘ மற்றும் ‘மிகவும் மோசம்‘ வகைகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அவ்வப்போது ‘கடுமை’ மண்டலத்திற்கும் சென்றது.
இதனிடையே தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னையை குறைக்க செயற்கை மழையை பொழியச் செய்வதற்கான சோதனை முயற்சி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.