பொக்ரானில் வழக்கமான பயிற்சியின்போது ஏவுகணையின் ஒரு பகுதி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் சனிக்கிழமை வழக்கமான பாதுகாப்புப் பயிற்சி நடைபெற்றது. அப்போது எல்லைக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தின் அருகே ஏவுகணை விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை.
பாதுகாப்பு வட்டாரங்களின்படி, திட்டமிடப்பட்ட ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஏவப்பட்ட ஏவுகணை, அதன் இலக்கை விட்டு விலகி ஜெய்சல்மரின் லத்தி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பதரியா கிராமத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் விழுந்தது. இதனால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெடிப்புச் சப்தம் ஏற்பட்டது.
இது அருகிலுள்ள கிராமவாசிகளிடையே பீதியைத் தூண்டியது. இதுகுறித்து லத்தி போலீஸ் அதிகாரி ராஜேந்திர குமார் கூறுகையில், ஏவுகணை துப்பாக்கிச் சூடு எல்லைக்குள் விழுந்தது. இது வழக்கமான பயிற்சியின் போது நடந்தது. சம்பவம் நடந்த உடனேயே, உள்ளூர் போலீஸாருடன் இணைந்து ராணுவம் மற்றும் விமானப்படை சம்பவ இடத்தை அடைந்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்தன.
ஏவுகணையின் பகுதி மீட்கப்பட்டு, ஒரு வாகனத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.