ராகுல் காந்தி  கோப்புப் படம்
இந்தியா

வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர்: ராகுல் குற்றச்சாட்டு

ஜனநாயகமும் அரசியலமைப்பும் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றாச்சாட்டு

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர் நடத்தப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசுகையில், ``வாக்குத் திருட்டை மறைக்கத்தான் எஸ்ஐஆர்.

சில நாள்களுக்கு முன்பாக, ஹரியாணா வாக்குத் திருட்டு குறித்து ஒரு விளக்கக் காட்சியை நான் அளித்தேன். சுமார் 25 லட்சம் வாக்குகள்; அதாவது எட்டில் ஒன்று திருடப்பட்டதாகத் தரவு தெளிவாகக் காட்டுகிறது.

இந்தத் தரவுகளை ஆராய்ந்த பிறகுதான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கரிலும் இதேபோல் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக நினைக்கிறேன். இது, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

எங்களிடம் நிறைய விரிவான தகவல்கள் உள்ளன. இதுவரையில் நாங்கள் காட்டியது ஒரு சிறிய பகுதி மட்டுமே.

ஜனநாயகமும் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பும் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் கூட்டாக இணைந்து இதில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குத் திருட்டுக்கு எதிரான பிரசாரம் தொடரும். தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: தேர்தலுக்கு மத்தியில் ஜாலியாக சுற்றுலா செல்லும் ராகுல்: பாஜக விமர்சனம்!

Congress MP Rahul Gandhi alleges vote theft cover-up through electoral roll revision

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் ரீல்ஸ்! பணியின்போது மேலாளர் அறையில் நடனாடும் இளம்பெண்!

ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது: மோகன் பாகவத்

சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த டேரில் மிட்செல்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

SCROLL FOR NEXT