புது தில்லி: தேசிய தலைநகர் புது தில்லி, இன்று காலை விடியும்போதே, கரும்புகை மண்டலம் சூழ்ந்துதான் காணப்பட்டது.
கடுமையான காற்று மாசு காரணமாக மக்கள் மூச்சு விட முடியாமலும், தொடர் இருமலுடனும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். கடந்த ஒரு சில நாள்களாகவே, புது தில்லியின் காற்று மாசு அளவு கடும் மோசம் என்ற அளவிலேயே நீடிக்கிறது.
காலை வேளையில், மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு கரும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில், புது தில்லியில் மக்கள் வீடுகளில் வைத்திருக்கும் காற்று சுத்திகரிப்பானை சுத்தம் செய்யும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
அதில், காற்று சுத்திகரிப்பானின், வடிகட்டிப் பகுதியில் மிகத் தடிமனான தூசுப் படலம் படர்ந்து உள்ளது. அதனை மக்கள் கைகளால் பிய்த்து எடுத்து வெளியேற்றுகிறார்கள். இது சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசின் அளவை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு விடியோவில், வடிகட்டியே தெரியாத அளவுக்கு மிகத் தடிமனான தூச ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்ப்பவர்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பல பகுதிகளில் மக்கள் சுத்தமான காற்று வேண்டும் என்று கோரி போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் மக்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் கைது செய்யும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.
ஒரு நாளில் காற்று சுத்திகரிப்பான் நிலையே இப்படியாகிறது என்றால், அந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க... வங்கதேசத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ஹபீஸ் சயீத்! உளவுத் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.