நாடு முழுவதும் சென்னை, தில்லி, மும்பை நகரங்களில் உள்ள கட்டுமானங்களின் எடை தாங்க முடியாமலும், நிலத்தடி நீர் அதிகப்படியாக சுரண்டப்படுவதாலும் பல கட்டுமானங்கள் பூமிக்குள் புதையும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் சுமார் 2,400 கட்டடங்கள், பூமிக்குள் புதையும் அபாயத்தில் இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்னை உள்பட, நாட்டில் உள்ள ஐந்து நகரங்கள், நிலத்தடி நீர் அதிகம் சுரண்டப்படுவதாலும், கட்டடங்களின் எடை கூடி வருவதாலும், பூமிக்கு அடியில் புதையும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இயற்கை நிலைத்தன்மை என்ற ஆங்கில இதழ் ஒன்றில், இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சென்னை, தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் 2,406 கட்டடங்கள், பூமிக்குள் புதையும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நிலப்பரப்பு உள் வாங்குவதால், ஏராளமான கட்டடங்கள் சேதமடையும் அபாயம் இருப்பதாகவும் இதே நிலை தொடர்ந்தால், சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் அபாயத்தை சந்திக்குமாம்.
செயற்கைக் கோளை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், 2015 - 2023 வரை பதிவான காட்சிகளைக் கொண்டு இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு ஆண்டும் 4 மி.மீ. அளவுக்கு நிலப்பரப்பு புதையுண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும், நிலத்தடி நீர் மட்டத்தை அவ்வப்போது கடல் நீர் சமநிலைப்படுத்துவதால், மற்ற நகரங்களுக்கு இருக்கும் அபாய அளவைக் காட்டிலும் சென்னைக்குக் குறைவு என்றும், மற்ற நகரங்களைக் காட்டிலும், சென்னையில் கோடைக் காலத்தில் குறையும் நிலத்தடி நீர் மட்டும், பருவமழைக் காலங்களில் ஓரளவுக்கு மீண்டுவிடுவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், சென்னையில் 958 கட்டடங்கள் அபாயத்தில் இருப்பதாக்வும், அடுத்த 30 ஆண்டுகளில் அபாய அளவு அதிகரித்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள், நிலத்தடி நீரைக் காப்பாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும், நிலத்தடி நீர் என்பது வேறும் தண்ணீர் தேவைக்காக மட்டுமல்ல, ஒரு நகரின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் உறுதி செய்யவும் என்று தெரிய வந்தள்ளது.
இதையும் படிக்க... தில்லியில் காற்று சுத்திகரிப்பான் நிலையே இப்படி என்றால் மனிதர்கள் நிலை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.