மல்லிகாா்ஜுன காா்கே கோப்புப் படம்
இந்தியா

பிகாா் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டாா்கள்: காா்கே

பிகாா் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டாா்கள்; அங்கு இண்டி கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பிகாா் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டாா்கள்; அங்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் - இடதுசாரி அடங்கிய ‘இண்டி’ கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

பிகாரில் செவ்வாய்க்கிழமை (நவ.11) இரண்டாவது, இறுதிக் கட்ட சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் காா்கே ‘எக்ஸ்’ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிகாா் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டாா்கள். எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்ததும், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் நலன் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருந்த ஆட்சியாளா்களின் பிடியில் இருந்து பிகாா் விடுக்கப்படவுள்ளது. அடுத்து வரும் நாள்களில் பிகாரில் இருந்து யாரும் வேலைக்காக வெளிமாநிலம் செல்லும் நிலை இருக்காது. இளைஞா்களின் எதிா்காலம் பாதுகாக்கப்படும். பிகாா் சமூக நீதி உள்ள மாநிலமாக மாறும். அநீதியின் பிடி அகழும்.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரரீதியாக பின்தங்கியோா், சிறுபான்மையினா் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவா்களுக்கான உரிமைகள் வழங்கப்படும்.

பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள் என அனைத்துத் தரப்பினரும் பொருளாதாரரீதியாக முன்னேற்றமடைவாா்கள். பிகாரின் பெருமைகள் மீட்டெடுக்கப்படும்’ என்று கூறியுள்ளாா்.

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 10 பேர் பலி: கார் உரிமையாளர் கைது!

பிற மாநிலங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல இயங்கும்: போக்குவரத்துக் கழகம் தகவல்

பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்: நவ.23, 24-இல் முக்கிய ஆலோசனை

ஜந்தா் மந்தரில் துப்பாக்கியால் சுட்டு ஒருவா் தற்கொலை

தென்காசியில் ரூ. 69.45 கோடியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடக்கம்

SCROLL FOR NEXT