விபத்து நடந்த இடத்தில் அணிவகுத்து நிற்கும் அவசர ஊர்திகள், காவல் துறையினர் படம் - பிடிஐ
இந்தியா

தில்லி சம்பவம்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

தில்லியில் கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மோடி ஆலோசனை.

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதில், தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் விபத்தையடுத்து அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமர் கேட்டறிகிறார்.

மேலும், ரயில்வே காவல் துறையினர் மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தில்லி நகரின் முக்கிய இடங்களில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரோந்துப் பணிகள் மட்டுமின்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே இன்று மாலை கார் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. இதனால், அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தில்லி கார் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மும்பை, உத்தரப் பிரதேசம், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | தில்லியில் கார் வெடித்து விபத்து: 8 பேர் பலி, பலர் காயம்

Prime Minister Narendra Modi speaks HM Amit Shah about delhi car blast

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT