பிகார் சட்டப் பேரவைக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிகட்டத் தேர்தலில் மொத்தம் 67.14 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகாரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் ஆர்வத்துடனும் வரிசையில் காத்திருந்தும் வாக்களித்துச் சென்றனர். அதோடு மூத்த குடிமக்களும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
பிகாரில் மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவ. 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65 சதவிகித வாக்குகள் பதிவானது.
தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(நவ. 11) காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
இதற்காக 45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 40,073 வாக்குச்சாவடிகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. இந்தத் தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 3.7 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
பிகார் இரண்டாம் கட்ட தேர்லில் அதிகபட்சமாக கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76,26 சதவிகிதமும், பூர்னியாவில் 73.79%, கதிஹார் மாவட்டத்தில் 75.23%, சுபாலில் 70.69%, பூர்வியில் 69.02%, பாங்காவில் 68.91 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில் நவாடா 53.17% அராரியாவில் 63.06%, ஆர்வாலில் 63.06, அவுரங்காபாததில் 66.03% பாகல்பூரில் 66.03%, ஜஹானாபாத்தில் 64.36, கைமூரில் 67.22%. பஸ்சிம் சம்பரானின் 69.02%, கயாவில் 67.50%, ஜமுய் 67.8% ரோடாஸ் 60.9%, ஷியோஹார் 67.31%, சீதாமாரியில் 65.28% மதுபானியில் 61.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சில மணி நேரங்களில் வெளியாக இருப்பதால், மாநிலத்தில் யார் ஆட்சியை கைபற்ற போகிறார்கள் என்பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.